
மூன்றே வருடங்களில் இந்திய சீன எல்லைக்கு அருகே உள்ள சீன வான் தளங்கள், வான் பாதுகாப்பு மற்றும் வானூர்தி தளங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய சீன எல்லைப் பிரச்சனை தொடங்குவதற்கு முன்னரே சீனா அனைத்து திட்டங்களுடன் இந்திய எல்லைக்கு அருகே கடந்த மூன்றே வருடங்களில் தளங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இவற்றில் பல தளங்களை நவீனப்படுத்தும் பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனா அனைத்து திட்டங்களுடன் இந்திய எல்லைப்பகுதிகளை கட்டுப்படுத்தும் நோக்கோடு தான் இந்த செயல்களை செய்து வருகிறது.அதன் பகுதியாக தான் ஏப்ரல் முதல் நடந்து வரும் இந்த பிரச்சனையை பார்க்க முடிகிறது.இந்த நவீனப்படுத்தும் பணிகள் முடியும் பட்சத்தில் சீனா மிகப் பெரிய ஆபரேசன்கள் நடத்த கூட இந்த தளங்கள் உபயோகப்படும்.
தகவல்கள் படி சீனா 13 புதிய ராணுவ நிலைகளை இந்திய எல்லைக்கு மிக அருகே ஏற்படுத்தி வருகிறது.இவற்றுள் மூன்று வான் தளங்கள்,ஐந்து நிரந்த வான் பாதுகாப்பு அமைப்பு தளங்கள் மற்றும் ஐந்து ஹெலிபோர்ட் ஆகியவை அடக்கம் ஆகும்.
சீனா தென் சீனக் கடல் தனக்கு என கொள்கை அமைத்து செயல்படுவதை போலவே இந்திய முனையிலும் படைகளை குவித்து வருகிறது.