
ஜீனில் பிரச்சனை தொடங்கியது முதல் எல்லைப் பகுதியில் தனது பலத்தை அதிகரித்து வருகிறது சீனா.தற்போது கிழக்கு லடாக் பகுதிக்கு மிக அருகாமையில் இருக்கும் சீனத் தளமான ஹோடானில் புதிய இரு ஓடு தளங்களை சீனா வேகமாக அமைத்து வருகிறது.ஜீன் இறுதியில் கட்டுமானம் தொடங்கினாலும் தற்போது அந்த பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.
காரகோரத்திற்கு வடகிழக்கே 250கிமீ தூரத்திலும் பிங்கர் 4 பகுதியில் இருந்து 380கிமீ தூரத்திலும் இந்த ஹோடன் தளம் அமைந்துள்ளது.
புதிய வெடிபொருள்கள் வைப்பதற்காக கட்டிடம்,தளத்தில் புதிய போர்விமானங்கள்,ராக்கெட் படைப்பிரிவுகளுக்காக புதிய கட்டிடம் ஆகியவை கட்டுமானம் என ஹோடன் தளத்தில் புது கட்டுமானங்களை சீனா மேற்கொண்டு வருகிறது.
இங்கு சீனாவின் ஐந்தாம் தலைமுறை விமானமான ஜே-20 விமானமும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது ஹோடன் தளத்தில் 3330மீ நீளமும் 60மீ அகலமும் கொண்ட ஓடு பாதை உள்ளது.
தற்போது கட்டப்பட்டு வரும் புதிய இரு ஓடுதளங்களும் 4கிமீ நீளமும் 60மீ அகலும் கொண்டதாக இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.