
பிஎஸ்எப்,ஐடிபிபி மற்றும் எஸ்எஸ்பி போன்ற எல்லைக் காவல் படைகளை உள்நாட்டு காவல் பணிகளில் இருந்து திரும்ப அழைக்க அரசு முடிவு செய்துள்ளது.திரும்ப அழைக்கப்படும் பிரிவுகள் நாட்டின் பல்வேறு எல்லை பகுதிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணிகள் உட்பட மற்ற உள்நாட்டு காவல் பணிகள் சிஆர்பிஎப் படைக்கு வழங்கப்படும்.தற்போது சிஆர்பிஎப் 3.25 லட்சம் வீரர்களுடன் பலம் வாய்ந்த படையாக உள்ளது.
இனிவரும் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு சிஆர்பிஎப் படை அந்தந்த மாநில படைகளுடன் பாதுகாப்பு பணியில் 70:30 என்ற விகிதத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.
எல்லைப் பாதுகாப்பு படை,இந்தோ திபத் காவல் படை, சசாஸ்திர சீம பால் போன்ற படைகள் உள்நாட்டு பாதுகாப்பு பணிகளில் இருந்து திரும்ப அழைக்கப்பட உள்ளது.
வருடாவருடம் இந்த படைகள் முன்னனி எல்லை காவல் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு தேர்தல் பணிகள்,சட்ட ஒழுங்கு பராமரிப்பு போன்ற பணிகளுக்காக உள்நாட்டில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.
எல்லைப் பாதுகாப்பு படை 3300கிமீ நீள பாக் எல்லையும்,4096கிமீ நீள வங்கதேச எல்லையும் பாதுகாக்கிறது.இந்தோ திபத் எல்லைப் படை 3488கிமீ நீள திபத் எல்லையை பாதுகாக்கிறது.எஸ்எஸ்பி படை 1751கிமீ நீள நேபாள எல்லை மற்றும் 699கிமீ நீள பூடான் எல்லையும் பாதுகாக்கிறது.