
பாக்கில் இருந்து காஷ்மீரின் சம்பா பகுதி எல்லை வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்துள்ளனர்.
ஐந்து நன்கு ஆயுதம் தரித்த பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர்.இதை கண்ட பிஎஸ்எப் வீரர்கள் பயங்கரவாதிகளை நோக்கி சுட்டுள்ளனர்.
உடனே பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்க பாக் ரேஞ்சர்கள் இந்திய வீரர்களை நோக்கி சுட்டுள்ளனர்.இந்த சமயத்தில் பயங்கரவாதிகள் தப்பி சென்றுள்ளனர்.
சில நாட்களாக எல்லையில் பயங்கரவாத ஊடுருவல்கள் அதிகரித்து வருகிறது.இதை தடுக்க மேலதிக 3000 இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.