“இரு எதிரிகளும் நமக்கு எதிராக தயாராக உள்ளனர்” பிஎஸ்எப் டிஜி ராகேஷ்

எல்லைப் பாதுகாப்பு படைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டிரேக்டர் ஜெனரல் ராகேஷ் அஸ்தானா அவர்கள் முன்னனி எல்லை பகுதிகளில் வீரர்களின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைக் கோடு பகுதிக்கு பயணம் செய்து வீரர்களை சந்தித்துள்ளார் அவர்.மூன்று நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ள அவர் ராஜோரி மற்றும் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிக்கும் சென்று வீரர்களின் தயார் நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.

எல்லைப் பாதுகாப்பு படையின் பாலோரா கேம்பில் பேசிய அவர் ” இது மிகவும் முக்கியமான நேரம்.இரு எதிரி நாடுகளும் நமக்கெதிரான திட்டங்கள் மூலம் தயாராக உள்ளனர்” என பேசியுள்ளார்.