மீண்டும் பிரிகேடியர் அளவிலான பேச்சுவார்த்தை-நான்கு மணி நேர பேச்சுவார்த்தை முடிவு ?

  • Tamil Defense
  • September 7, 2020
  • Comments Off on மீண்டும் பிரிகேடியர் அளவிலான பேச்சுவார்த்தை-நான்கு மணி நேர பேச்சுவார்த்தை முடிவு ?

இந்திய சீனப் பிரச்சனை எந்த நேரத்திலும் போராக வெடிக்க வாய்ப்புள்ளது.இதை தடுக்க இருநாட்டு இராணுவ அதிகாரிகளும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.அதன் தொடர்ச்சியாக நேற்றும் (ஞாயிறு) பிரைகேடு கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால் நான்கு மணி நேர பேச்சுவார்த்தை எந்த முடிவையும் தந்துவிடவில்லை.
கடந்த வாரம் மீண்டும் ஒரு முறை இந்திய சீனப்படைகள் மோதிக்கொண்ட பிறகு இரு நாடுகளும் மேலதிக படைப்பிரிவுகள் மற்றும் ஆயுதங்களை மோதல் நடந்த இடத்திற்கு அனுப்பி வைத்தன.பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க இந்தியா முயன்றாலும் இதுவரை பேச்சுவார்த்தைகள் பலனளிக்காமல் உள்ளது.

தவிர இந்தியப் பாதுகாப்பு அமைச்சரும் சீனப்பாதுகாப்பு அமைச்சரை சந்தித்து படை விலக்கம் குறித்து பேசியுள்ளார்.