தூரம் மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.இந்த ஏவுகணை 400கிமீ தூரம் உள்ள இலக்குகளை தாக்க வல்லது ஆகும்.
உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட பூஸ்டர் உடன் இந்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது டிஆர்டிஓ அமைப்பு.
மேம்படுத்தப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை செய்யப்படுவது இது இரண்டாவது முறை ஆகும்.உள்நாட்டில் மேம்படுத்தப்பட்ட ஏர்பிரேம் மற்றும் பூஸ்டர் உடன் இந்த ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்தியா இரஷ்யா இணைந்து மேம்படுத்தி தயாரித்து வரும் இந்த ஏவுகணை முதலில் 290கிமீ தூரம் சென்று தாக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டது.அதன் பிறகு தற்போது இந்தியா எம்டிசிஆர் அமைப்பில் இணைந்த பிறகு இதன் தாக்கும் தூரம் அதிகரிக்கப்பட்டது.