
பனிக்கால போர்முறையில் இந்திய இராணுவம் சிறந்த அனுபவச் செல்வம் கொண்டிருப்பதாக இராணுவ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.மிக குறுகிய காலத்திலேயே வீரர்கள் எதற்கும் தயாராக இருப்பர் என அவர் கூறியுள்ளார்.
1962க்கு பிறகு எப்போதும் இல்லாத வகையில் இந்த மே மாதத்திற்கு பிறகு மூன்று முறை எல்லையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
இந்தியா ஒரு அமைதி விரும்பும் நாடு ஆகும்.அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்ல உறவை பேண இந்தியா விரும்புகிறது.இதன் காரணமாகவே இந்தியா இந்த பிரச்சனையை பேசி தீர்க்க நினைக்கிறது.
நவம்பருக்கு பிறகு வெப்பநிலை உறைநிலைக்கும் மைனஸ் 40டிகிரி வரை செல்லும்.இது போன்ற கடினமான சூழ்நிலைகளில் உயர் மலைப் பகுதிகளில் பணியாற்றுவது மிகுந்த சிரமம் ஆகும்.மூச்சுத் திணறல் முதல் உயிரிழப்பு வரை ஆபத்துக்கள் நிறைந்துள்ளன.பனியில் சாலைகளும் மூடப்படும்.
இருந்தாலும் இவை அனைத்தையும் கடந்து நமது வீரர்கள் தேசத்திற்காக எதற்கும் தயார் நிலையில் உள்ளனர்.
இதுபோன்ற கடின நிலைகளில் பணி செய்யவும் தளவாடங்களையும் சப்ளைகளையும் இடைவிடாது முன்னனி நிலைகளுக்கு அனுப்பவும் இந்திய இராணுவம் பயிற்சி செய்துள்ளது.கடந்த 20ஆண்டுகளில் இதை கற்று தேர்ந்துள்ளது.இதன் மூலமாக நிறைய அனுபவங்களையும் பெற்றுள்ளது.
மேலும் சியாச்சின் பகுதிகளிலும் நமது படைகள் ஆகச் சிறந்த அனுபவம் பெற்றுள்ளன.