இந்தியாவின் பாரத் எர்த் மூவர்ஸ் என்ற நிறுவனம் இராணுவத்திற்கு 330 வாகனங்கள் டெலிவரி செய்யும் ஆர்டரை பெற்றுள்ளது.இந்த வாகனங்களில் பினாகா பலகுழல் இராக்கெட் அமைப்பு பொருத்தப்பட உள்ளது.
சுமார் 842 கோடி அளவிலான ஒப்பந்தத்தை பிஇஎம்எல் நிறுவனத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது.
கேரளாவின் பாலக்காடில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பிளான்டில் இந்த வாகனங்கள் தயார் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மூன்று வருடங்களுக்குள் இந்த வாகனங்கள் டெலிவரி செய்யப்படும்.