இந்திய-சீனப் பிரச்சனையில் உதவ அமெரிக்கா விருப்பம்

  • Tamil Defense
  • September 5, 2020
  • Comments Off on இந்திய-சீனப் பிரச்சனையில் உதவ அமெரிக்கா விருப்பம்

இந்தியா சீனா இடையே தற்போது நடைபெற்று வரும் மோதல் மோசமான நிலையை நோக்கி செல்வதாகவும் தற்போது இரு நாடுகளுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் கூறியுள்ளார்.

இது குறித்து இரு நாடுகளிடமும் பேசிவருவதாக அவர் கூறியுள்ளார்.சீனா இந்தியாவை வம்பிழுக்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப் ” முன்பு இருந்ததை விட அதிக வலிமையுடன் அதை செய்கின்றனர்” என கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் வேளையிலும் டிப்ளோமேட்டிக் மற்றும் மிலிட்டரி என இரு வழிகளிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் எஸ்சிஓ மாநாட்டின் போது இந்திய மற்றும் சீன பாதுகாப்பு துறை அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.இந்த சந்திப்பு 2 மணி நேரம் நீடித்துள்ளது.