இந்திய விமானப்படையின் கிழக்கு வான் கட்டளையகத்தின் கீழ் வரும் முன்னனி போர் விமான தளங்களை விமானப்படை தளபதி ஏர்சீப் மார்சல் பதாரியா அவர்கள் பார்வையிட்டுள்ளார்.
அனைத்து தளங்களும் போர்க்கால அடிப்படையில் தயார் நிலையில் உள்ளனவா என ஆராய்ந்த தளபதி படைகளின் தயார் நிலை குறித்து முக்கிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
விமானப்படை வீரர்களையும் சந்தித்த தளபதி அவர்களிடமும் உரையாடியுள்ளார்.அப்போது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார்.