பல ஆண்டுகால காத்திருப்பிற்கு பிறகு தலைக்கவசம் பெறும் இராணுவ வீரர்கள்

  • Tamil Defense
  • September 22, 2020
  • Comments Off on பல ஆண்டுகால காத்திருப்பிற்கு பிறகு தலைக்கவசம் பெறும் இராணுவ வீரர்கள்

ஒரு இராணுவ வீரருக்கு தலைக்கவசம் என்பது மிக முக்கியமான உயிர் காக்கும் கருவி ஆகும்.பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வீரர்களுக்கு அதிக பாதுகாப்பை தலைக்கவசம் அளிக்க கூடியது.

ஆனால் இந்த அடிப்படை கவசம் கூட பல ஆண்டுகளுக்கு இந்திய இராணுவ வீரர்களுக்கு கிடைக்காமல் இருந்தது.வீரர்கள் பட்கா எனப்படும் தலைக்கவசத்தை மட்டுமே சார்ந்து இருந்தனர்.அவற்றின் சேவை வயது முடிந்த பின்னரும் கூட தற்போதும் வீரர்கள் அதை அணிந்து வருகின்றனர்.

இந்த தலைக்கவசம் மிகுந்த எடையுடையது.பெரிய கனமான தலைக்கவசம் தான் பட்கா.கிட்டத்தட்ட 2.5கிகி எடை உடையது.முன்பகுதி தலை மற்றும் பின்பகுதி தலையை மட்டுமே இது பாதுகாக்கும்.

ஆனால் தற்போது இராணுவம் புதிய நவீன தலைக்கவச்சை பெறத் தொடங்கியுள்ளது.குறைந்த தூரத்தில் இருந்து சுட்டாலும் தாங்க கூடிய இந்த ரக தலைக்கவசத்தை இந்த மாதம் இராணுவ வீரர்கள் பெற உள்ளனர்.

இந்த வருட தொடக்கத்தில் கான்பூரில் உள்ள MKU limited என்ற நிறுவனம் சுமாய் 1.6 லட்சம் தலைக்கவசங்களை சுமார் 180கோடிகளுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றது.இந்த நிறுவனம் ஐநா மற்றும் நேட்டாே நாட்டு படைகளுக்கு இராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி செய்வது குறிப்பிடத்தக்கது.

குறைந்த தூரத்தில் இருந்து ஒரு 9மிமீ குண்டை சுட்டால் கூட இந்த தலைக்கவசம் தாங்கும்.இந்த தலைக்கவசத்தில் மற்ற தொலைதொடர்பு மற்றும் இரவுநேர பார்க்கும் கருவிகளை பொருத்த முடியும்.