யார் இந்த SFF படைப்பரிவு; இவர்களின் நோக்கம் என்ன?

  • Tamil Defense
  • September 3, 2020
  • Comments Off on யார் இந்த SFF படைப்பரிவு; இவர்களின் நோக்கம் என்ன?

பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் உளவுத்துறையின் கீழ் இயங்கும் எஸ்டபிளிஸ்மேன்ட் 22 அல்லது ஸ்பெசல் பிரான்டியர் போர்ஸ் எனப்படும் இந்த அதிரகசிய படைப்பிரிவை குறித்து தான் தற்போது நாடே பேசி வருகிறது.தெற்கு பங்கோங்கில் கடந்த சனி இரவு நடந்த ஆபரேசனில் SFF வீரர்களின் பங்கும் உள்ளது என ஊடகங்கள் முதல் இராணு வ வல்லுநர்கள் வரை கூறி வருகின்றனர்.தெற்கு பங்கோங்கில் சீனப்படைகளின் ஊடுருவலை முறியடித்து முக்கிய உயர்மலைப் பகுதிகளை ஆக்கிரமித்தது SFF பிரிவும் இராணுவமும்.இந்த சண்டையில் ஒரு SFF வீரர் கம்பெனி லீடர் டென்சின் வீரமரணம் அடைந்தார்.கண்ணிவெடி தாக்குதலில் அவர் வீரமரணம் அடைய ஒரு இளம் வீரர் காயமடைந்தார்.

1962 இந்திய சீனப் போருக்கு பிறகு இந்த படைப் பிரிவு தொடங்கப்பட்டது.இந்தியாவில் குடியேறியுள்ள திபத்தியர்கள் தான் அதிக அளவில் இந்த SFF படையில் கமாண்டோ வீரர்களாக உள்ளனர்.

போருக்கு பிறகு இந்தியாவின் உள்விவகார உளவுத்துறையான இன்டலிஜன்ஸ் பீரோ அமைப்பு ,வெளிவிவகார உளவுத்துறை “ரா” மற்றும் அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ ஆகியவை இணைந்து எதிரி எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவது சம்பந்தமான அனைத்து பயிற்சிகளும் அளித்தன.

தொடங்கப்பட்டு சில வருடங்களுக்கு எல்லையில் சீனாவின் அணுஆயுத பயன்பாடு குறித்து அறிய இந்த படை பயன்படுத்தப்பட்டது.

சுஜான் சிங் உபன் என்ற இராணுவ அதிகாரி தான் SFF படைக்கு முதல் தலைமை தாங்கினார்.அவர் பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் பணியாற்றிய போது ஐரோப்பாவில் 22வது மலையக ரெஜிமென்டை வழிநடத்தியமையால் SFF படைக்கு எஸ்டபிளிஸ்மென்ட் 22 என்ற துணை பெயரும் வழங்கப்படுகிறது.

தற்போது உத்ரகண்டின் சக்ரதாவில் தலைமையகம் உள்ளது.ஏறக்குறைய 5000 வீரர்களுடன் ஐந்து பட்டாலியன்கள் உள்ளன.இந்த படை அதிரகசியமானது.அவர்கள் செய்யும் நடவடிக்கைகளும் இரகசியமானவை.

சனியன்று நடந்த நடவடிக்கையில் உண்மையாகவே SFF படை பயன்படுத்தப்பட்டதா என குழப்பங்கள் உள்ளன.எங்களுக்கு கிடைத்த தகவல்களே முன்னுக்கு பின் முரணாகவே கிடைத்தன.

ஆனால் லடாக்கில் SFF படை ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டிருந்தது.லடாக் அல்லது எல்லையின் முன்புற நிலைகளில் SFF படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்களும் உள்ளன்.முன்னாள் இராணுவ அதிகாரி லெப் ஜென் செய்யது அடா ஹஸ்னைன் அவர்கள் கூறுகையில் “நான் லடாக்கில் பணிபுரியும் போது SFF எங்களுடன் பணிபுரிந்தது.16000 அடி உயரத்தில் வெறும் உடை மட்டுமே அணிந்து அவர்கள் கைப்பந்து விளையாடுவதை பார்த்துள்ளேன்.அவர்கள் அந்த நிலத்தோடு ஒன்றியவர்கள்.இதன் காரணமாக எந்த ஆபரேசனும் அவர்களுக்கு சாதகமாகவே அமையும்”. எனக் கூறியுள்ளார்.

சீனாவை வீழ்த்தி திபத்தை விடுவிக்க வேண்டும் என்பதே இவர்களின் முக்கிய குறிக்கோள்.

படையில் உள்ள அனைத்து வீரர்களும் வானில் இருந்து குதித்தல் பயிற்சி பெற்றவர்கள்.அதிஉயர் மலைப்பகுதிகளில் கூட..

1971 போர், ஆபரேசன் ப்ளூ ஸ்டார் , ஆபரேசன் மேகதூத்
மற்றும் கார்கில் போர்களில் கூட எஸ்எஸ்எப் படை போரிட்டுள்ளது.