Day: September 28, 2020

மச்சில் செக்டாரில் பாக் படைகள் தாக்குதல்-ஒரு இராணுவ வீரர் காயம்

September 28, 2020

காஷ்மீரின் பாக் உடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியின் மச்சில் செக்டாரில் பாக் படைகள் ஷெல் தாக்குதல் நடத்தின.இந்த தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த வீரர் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய இராணுவம் இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

சீன எல்லையில் நிர்பயா ஏவுகணை

September 28, 2020

சீனா எல்லையில் குவித்துள்ள ஏவுகணை படைகளுக்கு எதிராக இந்தியா தனது நிர்பயா சப்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை எல்லைக்கு நகர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தரையில் ஏவப்பட்டு தரை இலக்குகளை தாக்க வல்ல இந்த ஏவுகணை 1000கிமீ தூரம் வரை சென்று தாக்க வல்லது.தரையை ஒட்டிச் சென்று இலக்கை தாக்கும் திறன் பெற்றுள்ளது இந்த ஏவுகணை. டிஆர்டிஓ நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்டு கடந்த 7 வருடங்களாக சோதனை செய்யப்பட்டு வருகிறது.நிர்பயா ஏவுகணை களத்தில் இறக்கப்படுவது இதுவே முதல் முறை. தற்போது மிகக் […]

Read More