
தைவான் நீட்சியைக் கடந்து தைவான் வான் எல்லைக்குள் நுழைந்த 18 விமானங்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவற்றை இடைமறிக்க தைவான் தனது போர்விமானங்களை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நீட்சிக்கு அருகே போர்பயிற்சி செய்ய உள்ளதாக சீனா ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.தைவான் மொத்த நாட்டையும் சீனா தன்னுடையது என உரிமை கொண்டாடி வருகிறது.
எப்போதும் இல்லாத அளவு தைவான் அமெரிக்க உறவு அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இரு எச்-6 குண்டுவீசு விமானங்கள்,எட்டு ஜே-16 விமானங்கள் , நான்கு ஜே-10 விமானங்கள்,மற்றும் நான்கு ஜே-11 விமானங்கள் தைவான் எல்லைப்பகுதிக்குள் நுழைந்துள்ளன.இவை எப்போதையும் விட அதிக அளவிலான எண்ணிக்கை ஆகும்.
இதற்கு பதிலடியாக தைவான் போர்விமானங்களை அனுப்பியதும் குறிப்பிடத்தக்கது