இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீது கில்ஜித் பல்டிஸ்தான் பகுதியை தனது ஐந்தாவது மாகாணமாக பாக் அறிவிக்க உள்ளது.மேலும் வரும் நவம்பரில் அங்கு தேர்தலும் நடத்த உள்ளதாக பாக் பெடரல் அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். இந்த பகுதிக்கு பாக் பிரதமர் இம்ரான் கான் விரைவில் பயணம் செல்ல உள்ளதாகவும் இந்த பயணத்தின் போது ஐந்தாவது மாகாண அறிவிப்பை அவர் அறிவிப்பார் என பாக் அமைச்சர் அலி அமின் கூறியுள்ளார். மொத்த காஷ்மீர்,லடாக் மற்றும் கில்ஜித் பல்டிஸ்தான் ஆகியவை இந்தியாவிற்கு […]
Read Moreகாஷ்மீரின் காடிகால் பகுதியின் கரிவா என்னும் ஏரியாவில் ஒரு சின்டெக்ஸ் டேங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52கிகி அளவிலான வெடிபொருள்களை பாதுகாப்பு படைகள் பறிமுதல் செய்துள்ளனர்.இதன் மூலம் புல்வாமா போன்ற மற்றும் ஒரு தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவல்படி கரிவா பகுதியில் 42வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் மற்றும் காவல்துறை இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் 416 பாக்கெட் வெடிபொருள் கைப்பற்றப்பட்டது.இவற்றின் எடை 52கிகி அளவு ஆகும். இது தவிர மற்றொரு சின்டெக்ஸ் டேங்கில் இருந்து 50 டெடோனேட்டர்களும் கைப்பற்றப்பட்டது.
Read Moreஇந்திய சீன எல்லையில் பணிபுரியும் வீரர்களின் கவனத்தை திசைதிருப்பும் விதமாக எல்லையில் ஒலிப்பெருக்கிகளை வைத்து சீன இராணுவம் பஞ்சாபி பாடல்களை ஒலிப்பரப்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனா இதற்கு முன்பும் இதுபோல செய்துள்ளது. 1962 போர் தொடங்குவதற்கு முன்பும் இதுபோல பாலிவுட் பாடல்களை சீன ஒலிக்கச் செய்துள்ளது.இதன் மூலம் தங்களுக்கு இந்திய மொழி தெரியும் என்பது போல சித்தரிக்க முயல்கிறது. வீரர்களை மனரீதியாக பாதிக்க வைக்க இதுபோன்ற செயல்களை சீனா செய்கிறது..
Read Moreகடந்த மாதம் இந்திய பெருங்கடல் பகுதியில் லடாக் பிரச்சனை உச்சத்தில் இருந்தே போது சீனக் கடற்படையின் கண்காணிப்பு ஆராய்ச்சி கப்பல் ஒன்று நுழைந்தது. யுவான் வாங்க் ரக கப்பலான இது மலாக்கா நீரிணை வழியாக கடந்த மாதம் இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தது.இந்த கப்பலின் நடமாட்டத்தை இந்திய கடற்படை தொடர்ந்து உன்னிப்பாக கண்காணித்து வந்தது. இந்திய கடற்படையின் தொடர்ந்த கண்காணிப்பின் காரணமாக அந்த கப்பல் சில நாட்களுக்கு முன் சீனா திரும்பியது.இது போன்ற கப்பல் அடிக்கடி இந்திய கடற்பகுதிக்குள் […]
Read Moreஇராஜ்யசபாவில் கிழக்கு லடாக் பிரச்சனை குறித்து விளக்கி பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் இந்த எல்லைப் பிரச்சனையை இந்தியா அமைதியான முறையில் தீர்க்க நினைப்பதாக கூறியுள்ளார்.அதே நேரம் எல்லைப் பகுதியை காக்க எந்த ஆக்சனுக்கும் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.அவர் பேசியவை.. 1)இந்தியா-சீனா இடையே இருந்த வரலாற்றுக் கால எல்லைக் கோட்டை சீனா ஏற்க மறுக்கிறது.எல்லைக் கோடு தீர்க்கமாக வரையறுக்கப்படாத காரணமும் உள்ளது.மேலும் இது குறித்து 1950 மற்றும் 60களில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் முடிவு எட்டப்படவில்லை.எல்லைக் கோடு தொடர்பாக […]
Read Moreபனிக்கால போர்முறையில் இந்திய இராணுவம் சிறந்த அனுபவச் செல்வம் கொண்டிருப்பதாக இராணுவ அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.மிக குறுகிய காலத்திலேயே வீரர்கள் எதற்கும் தயாராக இருப்பர் என அவர் கூறியுள்ளார். 1962க்கு பிறகு எப்போதும் இல்லாத வகையில் இந்த மே மாதத்திற்கு பிறகு மூன்று முறை எல்லையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்தியா ஒரு அமைதி விரும்பும் நாடு ஆகும்.அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்ல உறவை பேண இந்தியா விரும்புகிறது.இதன் காரணமாகவே இந்தியா இந்த பிரச்சனையை பேசி […]
Read Moreஸ்ரீநகரின் பட்மாலூ பகுதியில் தற்போது நடைபெற்று வந்த என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.ஒரு சிஆர்பிஎப் அதிகாரி காயமடைந்துள்ளார். பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.தற்போது அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. சிஆர்பிஎப் படையின் டெபுடி கமாண்டன்ட் இந்த என்கௌன்டரில் காயமடைந்துள்ளார்.அவர் உடனடியாக 92வது தளமருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
Read Moreஇந்திய சீன எல்லையில் பதற்றம் தொடர்ந்து வருகிறது.இது எந்த நிலையிலும் சண்டையாக மாற அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன.இந்நிலையில் குளிர்காலம் தொடங்க உள்ளதால் முன்னனி பகுதிகளில் உள்ள வீரர்களுக்கு தொடர்ந்து ரேசன் உள்ளிட்ட சப்ளைகள் வழங்கப்பட வேண்டும்.இதற்காக மூல் எனப்படும் கழுதைகள் முதல் பெரிய அளவிலான சி-17 விமானங்கள் வரை அனைத்தின் உதவியுடனும் சப்ளைகள் தொடர்ந்து லடாக் எல்லைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. வெடிபொருள்கள்,தளவாடங்கள்,எரிபொருள், குளிர்கால சப்ளைகள்,உணவு பொருள்கள் ஆகியவை லடாக் முனைக்கு வேகமாக அனுப்பப்பட்டு வருகின்றன. மே மாதம் […]
Read More