Breaking News

Day: September 6, 2020

ரபேலால் பீதி அடைந்த பாக்,சீனாவிடம் ஜே-10 விமான வாங்க திட்டம்

September 6, 2020

இந்திய விமானப்படையில் ரபேல் விமானங்கள் இணைந்த பிறகு பாக் உண்மையாகவே பதற்றத்தில் உள்ளது.இதனை எதிர்கொள்ள பாக் சீனாவிடம் இருந்து 30 J-10CE மற்றும் நவீன வான்-வான் ஏவுகணைகளை வழங்க கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2009லிலேயே பாக் ஜே-10 விமானங்களை பெற இருந்தது.ஆனால் அதை விட விலைகுறைந்ததாக இருந்தமையால் அவர்கள் JF-17 விமானங்களை படையில் இணைந்தனர்.ஆனால் தற்போது ரபேல் பயம் காரணமாக J-10CE விமானங்கள் தவிர PL-10 மற்றும் PL-15 ஏவுகணைகளையும் வழங்க கேட்டுள்ளனர். அமெரிக்கா இந்தியா பக்கம் […]

Read More

இரஷ்யாவில் இருந்து நேராக ஈரான் செல்லும் பாதுகாப்பு துறை அமைச்சர்

September 6, 2020

இரஷ்யாவில் எஸ்சிஓ கூட்டத்தை முடித்து பாதுகாப்பு துறை அமைச்சர் நேராக (செப் 5 இரவு) ஈரான் செல்ல உள்ளார்.அங்கு அவர் ஈரானிய பாதுகாப்பு துறை அமைச்சரை சந்திக்க உள்ளார். இது குறித்து டிவிட்டரில் பதிவு செய்திருந்த அவர் ” மாஸ்கோவில் இருந்து ஈரான் புறப்படுகிறேன்.அங்கு ஈரானிய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அமிர் ஹதாமி அவர்களை சந்திக்கிறேன்” என பதிவு செய்துள்ளார்.

Read More

இந்திய-இரஷ்ய கடற்படைகள் வங்காள விரிகுடாவில் போர்பயிற்சி

September 6, 2020

இந்திய இரஷ்ய கடற்படைகள் இரண்டாம் நாளாக வங்காள விரிகுடா பகுதியில் போர்பயிற்சி நடத்தி வருகின்றன.இந்திய-சீன பிரச்சனையால் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படை கண்காணிப்பை அதிகப்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்த போர்பயிற்சி நடைபெற்று வருகிறது. கடற்பரப்பு எதிர்ப்பு போர்முறை,விமான எதிர்ப்பு போர்முறை ,உலங்கு வானூர்தி ஆபரேசன் ஆகியவை இந்திர நேவி போர் பயிற்சியின் கீழ் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் ரஷ்ய கடற்படையின் அட்மிரல் வினோகிரதோவ் மற்றும் அட்மிரல் ட்ரிபுட்ஸ் ஆகிய டெஸ்ட்ராயர் கப்பல்களும் , […]

Read More

எல்லைக் கோட்டை மாற்ற முயற்சிக்க வேண்டாம்-பாதுகாப்பு துறை அமைச்சர் எச்சரிக்கை

September 6, 2020

லைன் ஃஆப் ஆக்சுவல் கன்ட்ரோல் எனப்படும் எல்லைக் கோட்டை சீனா கண்டிப்பாக மதித்து நடக்க வேண்டும் என சீனாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவுடன் இணைந்து பணியாற்றி மோதல் நடைபெற சாத்தியமுள்ள பகுதிகளில் இருந்து சீனா வெளியேற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தியா தனது முன் எல்லைப் புற பகுதிகளை காக்க உறுதியுடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.சீன பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின் போது பேசிய அமைச்சர் இராஜ்நாத் சிங் அவர்கள் , சீன வீரர்கள் […]

Read More

பிளாக் டாப் அருகே உள்ள முக்கிய பகுதியை தன்வசப்படுத்திய ஐடிபிபி படை

September 6, 2020

தெற்கு பங்கோங் பகுதியில் முக்கிய உயர் மலைப் பகுதிகள் இந்திய இராணுவ வீரர்கள் வசம் இருக்கும் நேரத்தில் பிளாக் டாப் அருகே உள்ள முக்கிய மலைப் பகுதி ஒன்றை 30பேர் கொண்ட ஐடிபிபி படை தன் வசப்படுத்தியுள்ளது. இதற்கு அந்த பகுதி யார் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் இருந்துள்ளது.அது தற்போது வீரர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.வடக்கு பங்கோங்கில் பிங்கர் 2 மற்றும் 3 க்கு அருகே உள்ள தான்சிங் நிலையில் மட்டுமே அதிக அளவில் ஐடிபிபி படைப் பிரிவினர் உள்ளனர்.

Read More