Day: September 5, 2020

லெப்டினன்ட் கலோனல் தான் சிங் தாபா

September 5, 2020

நேபாளி தம்பதியர்களுக்கு 10 ஜீன் 1938 அன்று ஹிமாச்சலின் சிம்லாவில் பிறந்தார் தாபா அவர்கள்.சிறுவயதிலேயே போர்க்குணம் பெற்றிருந்த அவர் இந்திய இராணுவத்தின் 8வது கூர்கா ரைபிள்சில் 28 ஆகஸ்டு 1949ல் இணைந்தார்.கூர்கா வீரர்கள் என்றாலே இளமையிலேயே போர்க்குணம் வந்துவிடும்.தனது பணியை தொடங்கினார். இந்தியச் சீனப் போர் 1962 இந்தியச் சீனப் போரின் போது லடாக்கின் வடக்கு பான்கோங் ஏரியின் பகுதியில் இருந்த சிரிஜிப் சமவெளியை கைப்பற்ற படைகளுக்கு உத்தரவிடப்பட்டது.இந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் நம்மால்Shushul வான் […]

Read More

எல்லையில் மூன்று செக்டார்களில் பாக் படைகள் தாக்குதல்

September 5, 2020

காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தின் மூன்று செக்டார்களில் பாக் இராணுவம் தொடர்ந்து மோர்ட்டார்களை வீசி கடும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷாபூர்,கிர்னி மற்றும் டெக்வார் செக்டார்களில் இந்த தாக்குதலை பாக் இராணுவம் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய இராணுவம் கடுமையான பதிலடிகளை வழங்கி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More

ஐந்து எல்லையோர கிராமத்தினரை கடத்திய சீனப்படைகள்

September 5, 2020

இந்திய சீன எல்லைப் பிரச்சனை முற்றி வரும் வேளையில் அருணாச்சலின் அப்பர் சுபன்ஸ்ரீ மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேரை சீனப்படைகள் பிடித்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டகின் என்ற பிரிவை சேர்ந்த ஐந்து பேரையும் நாச்சோ எனும் பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இருந்து பிடித்து சென்றுள்ளனர்.இவர்கள் காட்டுப் பகுதிக்கு வேட்டையாட சென்றதாக பிடித்து செல்லப்பட்டவரின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

Read More

இந்திய-சீனப் பிரச்சனையில் உதவ அமெரிக்கா விருப்பம்

September 5, 2020

இந்தியா சீனா இடையே தற்போது நடைபெற்று வரும் மோதல் மோசமான நிலையை நோக்கி செல்வதாகவும் தற்போது இரு நாடுகளுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் கூறியுள்ளார். இது குறித்து இரு நாடுகளிடமும் பேசிவருவதாக அவர் கூறியுள்ளார்.சீனா இந்தியாவை வம்பிழுக்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப் ” முன்பு இருந்ததை விட அதிக வலிமையுடன் அதை செய்கின்றனர்” என கூறியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் வேளையிலும் டிப்ளோமேட்டிக் […]

Read More

தயாராகும் சீனா-ஹோடன் தளத்தில் புதிய இரு ஓடுபாதைகள் அமைக்கும் சீனா

September 5, 2020

ஜீனில் பிரச்சனை தொடங்கியது முதல் எல்லைப் பகுதியில் தனது பலத்தை அதிகரித்து வருகிறது சீனா.தற்போது கிழக்கு லடாக் பகுதிக்கு மிக அருகாமையில் இருக்கும் சீனத் தளமான ஹோடானில் புதிய இரு ஓடு தளங்களை சீனா வேகமாக அமைத்து வருகிறது.ஜீன் இறுதியில் கட்டுமானம் தொடங்கினாலும் தற்போது அந்த பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. காரகோரத்திற்கு வடகிழக்கே 250கிமீ தூரத்திலும் பிங்கர் 4 பகுதியில் இருந்து 380கிமீ தூரத்திலும் இந்த ஹோடன் தளம் அமைந்துள்ளது. புதிய வெடிபொருள்கள் வைப்பதற்காக கட்டிடம்,தளத்தில் புதிய போர்விமானங்கள்,ராக்கெட் […]

Read More