லான்ஸ் நாய்க் மோகன்நாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரத்தையும்,புகழையும் ,தைரியத்தயும் கொண்ட வீரவரலாறு.காஷ்மீரின் நடைபெற்ற மூன்று முக்கிய தீவிரவாத எதிர்ப்பு ஆபரேசன்களிலுமே தன்னார்வமாக இணைந்தவர். சாவின் முகத்தை நேருக்கு நேராக நின்று பார்த்து சிரித்தவர். சாவை தன்னை ஆக்கிரமிக்க அனுமதித்தது அவரே அன்றி வேறெதுவுமில்லை. லான்ஸ் நாய்க் மோகன் அவர்கள் இந்திய இராணுவத்தின் பாராச்சூட் ரெஜிமென்டை சார்ந்த வீரர் ஆவார்.செப்டம்பர் 2015ல் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாத எதிர்ப்பு ஆபரேசனில் வீரமரணம் அடைந்த மோகன் நாத் அவர்களுக்கு அமைதி […]
Read Moreபிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் உளவுத்துறையின் கீழ் இயங்கும் எஸ்டபிளிஸ்மேன்ட் 22 அல்லது ஸ்பெசல் பிரான்டியர் போர்ஸ் எனப்படும் இந்த அதிரகசிய படைப்பிரிவை குறித்து தான் தற்போது நாடே பேசி வருகிறது.தெற்கு பங்கோங்கில் கடந்த சனி இரவு நடந்த ஆபரேசனில் SFF வீரர்களின் பங்கும் உள்ளது என ஊடகங்கள் முதல் இராணு வ வல்லுநர்கள் வரை கூறி வருகின்றனர்.தெற்கு பங்கோங்கில் சீனப்படைகளின் ஊடுருவலை முறியடித்து முக்கிய உயர்மலைப் பகுதிகளை ஆக்கிரமித்தது SFF பிரிவும் இராணுவமும்.இந்த சண்டையில் ஒரு SFF […]
Read Moreஇந்தியா சீனப் பிரச்சனை எந்த நேரத்திலும் போராக வெடிக்கலாம் என்ற நிலை உள்ளது.இதை ஏன் உறுதியாக கூறுகிறேன் என்றால் பேச்சுவார்த்தைகள் பலனளிக்காதது தான்.பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமே இல்லாமல் முடிவு இல்லாமல் முடிந்து வருகிறது. முன்பு நடந்த பேச்சுவார்த்தைகளின் போது ஒப்புக்கொண்ட சில விசயங்களை கூட சீனா மீறியுள்ளது.அப்படி ஒரு சம்பவம் தான் ஆக29/30 இரவு நடந்த சம்பவம்.இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீனப்படைகளை இந்திய வீரர்கள் தடுத்து விரட்டினர். இதற்கு மறுநாள் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே மீண்டும் […]
Read Moreபங்கோங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியின் முக்கியமான உயர்மலைப் பகுதிகள் இந்திய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஃபிங்கர் 4 மலைப் பகுதி இன்னும் சீனப்படைகளின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ஃபிங்கர் 4 மலைமுகடு வரிசையில் சீனப்படைகள் அமர்ந்திருந்தாலும் சீனப்படைகளுக்கு அழுத்தம் தரும் வகையில் இந்தியப் படைகள் அருகே உள்ள உயர்மலைப் பகுதிகளில் தங்களது நிலையை வலுப்படுத்தியுள்ளனர். பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் எதுவுமே பலனளிக்காத வேளையில் தற்போது எல்லை பதற்றத்துடனே காணப்படுகிறது.தெற்கு ஏரி பகுதியில் தற்போது இந்திய […]
Read Moreஇந்திய விமானப்படையின் கிழக்கு வான் கட்டளையகத்தின் கீழ் வரும் முன்னனி போர் விமான தளங்களை விமானப்படை தளபதி ஏர்சீப் மார்சல் பதாரியா அவர்கள் பார்வையிட்டுள்ளார். அனைத்து தளங்களும் போர்க்கால அடிப்படையில் தயார் நிலையில் உள்ளனவா என ஆராய்ந்த தளபதி படைகளின் தயார் நிலை குறித்து முக்கிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். விமானப்படை வீரர்களையும் சந்தித்த தளபதி அவர்களிடமும் உரையாடியுள்ளார்.அப்போது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார்.
Read Moreதற்போது எல்லையில் நடைபெற்று வரும் பிரச்சனையில் மோதல் முற்றி வரும் நிலையில் தற்போது இராணுவ தளபதி நரவனே அவசரமாக லடாக் விரைந்துள்ளார். அவரது இரு நாள் பயணத்தின் போது கள கமாண்டர்கள் படைகளின் தயார் நிலை குறித்து இராணுவ தளபதிக்கு விளக்கம் அளிப்பர். இந்திய எல்லைக்குள் சீனப்படைகள் நுழைய முற்பட்டதை அடுத்து இந்திய படைகள் அதை தடுத்து நிறுத்தினர்.அதன் பிறகு வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தனத இருப்பை சில மலைப்பகுதிகளில் இந்திய இராணுவம் வலுப்படுத்தியுள்ளது. தற்போது […]
Read Moreபங்கோங் ஏரியின் தெற்கு பகுதிகளில் இந்திய எல்லையை ஒட்டிய முக்கிய உயர் பகுதிகளில் இந்திய இராணுவம் தனது இருப்பை வலுப்படுத்தியதை அடுத்து வடக்கு பகுதியிலும் பிங்கர் நான்கின் ரிட்ஜ்லைன் பகுதிகளில் தனது இருப்பு நிலையை வலுப்படுத்தியுள்ளது இந்திய இராணுவம். கிட்டத்தட்ட இதே ரிட்ஜ்லைன் அருகே சீனப்படைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.ஆனால் பிங்கர் நான்கு பகுதியை இந்தியப்படைகள் கைப்பற்றியுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.பங்கோங் ஏரியின் வடக்கு பகுதியில் முன்னெச்சரிக்கையாக இந்திய படைகள் தங்கள் இருப்பு நிலைகளில் சில […]
Read Moreஇந்தியாவின் பாரத் எர்த் மூவர்ஸ் என்ற நிறுவனம் இராணுவத்திற்கு 330 வாகனங்கள் டெலிவரி செய்யும் ஆர்டரை பெற்றுள்ளது.இந்த வாகனங்களில் பினாகா பலகுழல் இராக்கெட் அமைப்பு பொருத்தப்பட உள்ளது. சுமார் 842 கோடி அளவிலான ஒப்பந்தத்தை பிஇஎம்எல் நிறுவனத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வழங்கியுள்ளது. கேரளாவின் பாலக்காடில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பிளான்டில் இந்த வாகனங்கள் தயார் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மூன்று வருடங்களுக்குள் இந்த வாகனங்கள் டெலிவரி செய்யப்படும்.
Read Moreதெற்கு பங்கோங் ஏரியில் சமீபத்தில் நடந்த மோதலில் எந்த இந்திய வீரரும் கொல்லப்படவில்லை என சீனா மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது.தற்போது நடைபெற்ற மோதலுக்கு இந்தியா தான் காரணம் என சீனா தொடர்ந்து கூறி வருகிறது. சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூ சுன்யிங் கூறுகையில் “என்னுடைய நம்பிக்கை படி எல்லையில் எந்த வீரரும் கொல்லப்படவில்லை” என கூறியுள்ளார். மேலும் கூறுகையில இந்திய வீரர்கள் சீன எல்லைக்குள் நுழைந்து எல்லைக் கோட்டை மாற்ற முயற்சித்துள்ளனர் என பேசியுள்ளார்.
Read More