Day: September 2, 2020

லிபுலேக்கில் இந்திய இராணுவத்தின் நடமாட்டத்தை கவனிக்க நேபாள படைகளுக்கு உத்தரவு

September 2, 2020

லிபுலேக்கில் பகுதியில் இந்திய இராணுவத்தின் நடமாட்டத்தை கவனிக்க நேபாள படைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அந்நாட்டு அரசு. உத்ரகண்டின் கலபேனி பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா-சீனா-நேபாளம் என மூன்று நாடுகளின் எல்லை சந்திக்கும் இடத்தை ஒட்டியுள்ள பகுதி தான் லிபுலேக்.இந்த லிபுலேக் பகுதியில் இந்திய இராணுவத்தின் நடமாட்டத்தை கண்காணிக்க நேபாள இராணுவ படைகளுக்கு அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நேபாள இராணுவத்தின் 44வது பட்டாலியன் தற்போது லிபுலேக்கை கண்காணிக்க நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவும் லிபுலேக் பகுதியில் தனது படைப்பலத்தை […]

Read More

ப்ளாக் டாப் மலையை கைப்பற்றிய இந்திய இராணுவம்

September 2, 2020

சீனாவுடனான எல்லைப் பிரச்சனை பெரிதாகி வரும் நிலையில் நேபாளம் மற்றும் பூடான் உடனான இந்திய எல்லைப் பகுதியில் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளது இந்திய இராணுவம். எல்லைப் பகுதிகளை காவல் காக்கும் படைப் பிரிவுகள் உட்சபட்ச தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையிலும் சீனப்படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர்.இதை வெற்றிகரமாக இந்திய படைகள் தடுத்து நிறுத்தியுள்ளன. மேலும் தெற்கு பங்கோங் பகுதியில் ப்ளாக் டாப் உள்ளிட்டு முக்கிய உயர்மலைப் பகுதிகளை இந்திய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

Read More

1962ஐ விட மோசமாகும்; இந்தியாவை எச்சரிக்கும் சீனாவின் குளோபல் டைம்ஸ்

September 2, 2020

இந்தியா எல்லையில் ஆக்சனை விரும்பினால் 1962 போரை விட இந்தியாவிற்கு அதிக இராணுவ சேதத்தை சீனா விளைவிக்கும் என சீன நாட்டு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் 90% சீனர்கள் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என கூறுவதாக குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.தேவைப்படும் போது சீனா கண்டிப்பாக ஆக்சன் எடுக்க வேண்டும் எனவும் அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவை விட பலமடங்கு சக்தி கொண்டது சீனா.இந்தியா சீனாவிற்கு இணையான எதிரி கிடையாது என […]

Read More