தேசிய பாதுகாப்புக்கு உதவும் வகையிலான உலகின் உயரமான ரயில்வே பாலம் அடுத்த வருடம் காஷ்மீரில் திறப்பு !!

  • Tamil Defense
  • August 4, 2020
  • Comments Off on தேசிய பாதுகாப்புக்கு உதவும் வகையிலான உலகின் உயரமான ரயில்வே பாலம் அடுத்த வருடம் காஷ்மீரில் திறப்பு !!

பொருளாதார முன்னேற்றம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு உதவும் வகையிலான உலகின் உயரமான ரயில்வே பாலம் அடுத்த வருடம் காஷ்மீரில் திறப்பு !!

அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் வாக்கில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இந்த பாலம் சினாப் நதியின் குறுக்கே சுமார் 1,315மீட்டர்கள் நீளத்திற்கு கட்டப்படுகிறது, மேலும் இதன் உயரம் தரையில் இருந்து சுமார் 359 மீட்டர்கள் ஆகும், அதாவது பாரீஸ் ஈஃபிள் கோபுரத்தை விட 35மீட்டர்கள் அதிக உயரம் கொண்டதாகும்.

சுமார் 1250கோடி ருபாய் மதிப்பிலான இந்த கட்டுமான பணி கடந்த 2009ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு பின்னர் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டு மீண்டும் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு முடிவை நெருங்கி கொண்டிருக்கிறது.

இதன் கட்டுமான பணிகள் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்டுமான குழுமமான ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் ஆஃப்கான்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த பாலத்தின் கட்டுமான பணிகளில் ஏறத்தாழ சுமார் 5,500 டன்கள் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டு உள்ளது, மேலும் சுமார் 260கிலோமீட்டர் வேகத்தில் வீசும் காற்றையும் சமாளிக்கும் வகையிலும் கட்டுப்படும் இந்த பாலம் சீனாவின் சீனாவின் பெய்பான் நதிக்கு குறுக்கே கட்டபட்டுள்ள ஷய்பாய் ரயில்வே பாலத்தின் (275மீட்டர்) சாதனையை முறியடிக்க உள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியை இந்தியாவுடன் ரயில் மூலமாக இணைக்கும் இந்த பாலத்தின் பணிகள் மத்திய அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜம்மு பகுதி வரை மட்டுமே ரயில்வே போக்குவரத்து உள்ள நிலையில் இந்த பாலம் திறக்கப்பட்ட பின்னர் காஷ்மீர் பிராந்தியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு அங்குள்ள மக்கள் பொருளாதார ரீதியாக பயனடையவும், ராணுவத்திற்கும் உதவியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.