
இந்திய சீன எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள வீரர்களுக்கு உலகத் தரத்திலான உடைகள்,பனி ஷீக்கள்,கை உறைகள், ஜாக்கெட்டுகள்,ட்ரௌசர்கள் மற்றும் தூங்கும் பேக் ஆகியவை பெறப்பட உள்ளன.
லடாக்கில் பெரிய அளவில் வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.சாதாரண காலங்களில் 10000 வீரர்கள் வரை நிலை நிறுத்தப்படுவர்.இந்த வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தற்போது 30000 மேலதிக வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இரவு நேரத்தில் குளிர் மைனஸ் 30டிகிரிக்கும் கீழே சென்றுவிடும்.தற்போது ஒவ்வொரு வீரருக்கும் மேற்குறிப்பிட்ட பொருள்கள் வழங்குவதற்கு வீரர் ஒருவருக்கு 1 லட்சம் என்ற அளவில் செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பரின் முதல் வாரத்தில் பனி நிறைய துவங்கும்.இது உறை வெப்பநிலைக்கும் தாழ்ந்து செல்லும்.இந்த பகுதியே 14000 அடி உயரத்தில் உள்ளது.சில பகுதிகள் 17000 அடி உயரத்தில் உள்ளன.
இது தவிர வீரர்களுக்கு தகுந்த உணவும் வழங்கப்பட வேண்டும்.