எதிரி தாக்கினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்-பாதுகாப்பு துறை அமைச்சர்
1 min read

எதிரி தாக்கினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும்-பாதுகாப்பு துறை அமைச்சர்

எதிரிகள் தாக்கினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு துறை அமைச்சர் எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எந்த ஒரு நாடையும் குறிப்பிட்டு கூறாமல் இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.இந்தியாவை ஆக்கிரமிக்க நினைத்தால் கடுமையான இழப்பை சந்திக்க நேரிடும் என அவர் கூறியுள்ளார்.

இதயங்களை வெல்வதில் தான் இந்தியா நம்பிக்கை கொள்கிறது எனவும் மற்றவர்களின் நிலத்தை வெல்வதில் அல்ல என அவர் கூறியுள்ளார்.

இந்தியா இதுவரை எந்த நாட்டை தாக்கவோ அல்லது எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கவோ முயன்றதில்லை என அவர் கூறியுள்ளார்.