ஏன் ரபேல் ஒரு முக்கிய ஆயுதமாக பார்க்கப்படுகிறது? ஒரு பார்வை…!

  • Tamil Defense
  • August 4, 2020
  • Comments Off on ஏன் ரபேல் ஒரு முக்கிய ஆயுதமாக பார்க்கப்படுகிறது? ஒரு பார்வை…!

ஒரிஜினல் ரபேல் F-3R வகையில் இந்தியாவின் தன்மைக்கு ஏற்ப 13 மாறுதல்களை செய்து இந்தியாவிற்கான ரபேல் F-3R(I) ரகம் பெறப்பட்டுள்ளது.அதிநவீன ஏவியோனிக்ஸ் அமைப்புகள் மற்றும் அதிநவீன மீட்டியர் வான் பாதுகாப்பு ஏவுகணைகளுடன் இந்திய அமைப்பு அதிநவீன ரகம் ஆகும்.

13 மாற்றங்களுடன் இந்தியா வரும் ரபேல் விமானம் கண்டிப்பாக எந்த எதிரியையும் சந்திக்கும் திறன் கொண்டதாகதான் அமையும்.

முதலில் இந்தியாவிற்காக ரபேல் விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட 13 மாற்றங்களை காணலாம்…!

1)ரேடியோ அல்டிமீட்டர் உயர் அளவுமானி( Radio Altimeter height measurement) 10,000 அடி முதல் 15,000 அடி வரை

2) ரேடியோ எச்சரிக்கை ரிசீவர் (RWR) frequency band from 2.5 -18 GHzto 10 18 GHz

3)லோ பேன்ட் ஜாம்மர் (LBJ) போட் உடன் அதிர்வெண் 1- 4.5 gHz

4)பிளைட் டேடா ரெக்கார்டு (FDR) 10 முதல் 16 மணி நேர டேடாக்களை ரெகார்டு செய்ய வல்லது மேலும் இரு மணி நேரம் ஆடியோ ரெகார்டு செய்ய வல்லது.

5)அதிஉயரத்தில் என்ஜின் இயக்கம் 12,000 அடி உயரம் வரை

6) ரேடாரில் உத்தரவுகளுக்கு கட்டுபடாத இலக்கை அடையாளம் கண்டுபிடித்தல் அடையாளம் கண்டு பிடிக்கும் வசதி.

7) டாப்லர் பீம் ஷார்ப்பனிங் மற்றும் சிந்தடிக் அபர்ச்சர் ரேடார் வசதிகள்

8) தரையில் நகரும் இலக்கு குறிக்கும் கருவி மற்றும் தரையில் நகரும் இலக்கை கண்டுபிடிக்கும் கருவி ஆகிய வசதிகள்,

9)அகச்சிவப்பு தேடல் மற்றும் கண்டுபிடிப்பு கருவிகள்.

10) விமானியின் ஹெல்மெட்டிலேயே காண்திரை வசதி.

11) ஏவுகணை நெருங்குதல் எச்சரிக்கை அமைப்பில் பயிற்சி வசதி

12) இழுத்து செல்லப்படும் வகையிலான X Guard decoy

13) அதி உயர் அலைவரிசையிலான ஆம்னி ரேஞ்ச்.

இந்த மேம்பாடுகள் இருந்தாலும் எதிர்காலத்தில் மேலதிக மேம்பாடுகளை செய்து கொள்ள ரஃபேல் விமானம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

சீனாவுடனான போரில் அவர்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் நமக்கு மிகப்பெரிய சவாலாகும், ஆனால் நமது ரஃபேல் விமானங்களில் பயன்படுத்தப்படும் ஸ்கால்ப் ஈஜி (SCALP EG) ஏவுகணை சுமார் 560கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே வான் பாதுகாப்பு அமைப்புகளை தாக்க உதவும்.

இதன்மூலம் நமது போர் விமானங்கள் அவர்கள் வான் பாதுகாப்பு அமைப்புகளின் தாக்குதல் வரம்பிற்கு வெளியில் இருந்து தாக்குதல் நடத்தி அந்த அமைப்புகளை அழிக்க முடியும்.

இதன் பின்னர் நமது சு30, ஜாகுவார், மிராஜ் 2000 ஆகிய விமானங்கள் உள்நுழைந்து அவர்கள் விமான தளங்களின் மீது தாக்குதல் நடத்த முடியும், இந்த வகையில் ரஃபேல் போரின் தன்மையை மாற்றக்கூடியது என்பதில் சந்தேகமில்லை.

இதுவே பாகிஸ்தான் விஷயத்தில் எஸ்400 மற்றும் ரஃபேல் போர் விமானங்கள் பாக் வான்பரப்பிலேயே அவர்களது விமானங்களை அழிக்க வல்லவை ஆகும் என்பது கூடுதல் சிறப்பு.