குஜராத்தில் உடைக்கப்பட உள்ள இந்திய கடற்படையில் விராட் விமானம் தாங்கி கப்பல்
1 min read

குஜராத்தில் உடைக்கப்பட உள்ள இந்திய கடற்படையில் விராட் விமானம் தாங்கி கப்பல்

இந்திய கடற்படையில் 30 வருட இடைவிடாத தேசப்பணிக்கு பிறகு 3 வருடங்களுக்கு முன்பு விராட் விமானம் தாங்கி கப்பல் படையில் இருந்து விடுவிக்கப்பட்டது.தற்போது இந்த கப்பல் மும்பையிலா இருந்து குஜராத் கொண்டு செல்லப்பட்டு அங்கு உடைக்கப்பட்டு விற்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1987ல் முதல் படையில் இருந்து செயல்பட்ட இந்த கப்பலை ஸ்ரீ ராம் க்ருப் 38.54 கோடிக்கு ஏலம் எடுத்தது.தற்போது இந்த கப்பல் உடைக்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

மும்பையில் இருந்து குஜராத்தின் ஆலங் செல்ல மூன்று நாட்கள் ஆகும்.9-12 மாதத்திற்குள் இந்த கப்பல் முழுதும் உடைக்கப்பட உள்ளது.