தென்சீனக்கடல் பதற்றம்;ஒரே நாளில் ஏவுகணை சோதனைகள் செய்த அமெரிக்கா மற்றும் சீனா

  • Tamil Defense
  • August 7, 2020
  • Comments Off on தென்சீனக்கடல் பதற்றம்;ஒரே நாளில் ஏவுகணை சோதனைகள் செய்த அமெரிக்கா மற்றும் சீனா

அமெரிக்கா தனது மினிட்மேன் 3 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையும் மறுபுறம் சீனா விமானம் தாங்கி கப்பல் அழிப்பு என்று அழைக்கும் இரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது.

டிஎப்-26 மற்றும் டிஎப்-16 என்ற இரு ஏவுகணைகளையும் சோதனை செய்துள்ளது.

கலிபோர்னியாவின் வான்டெர்பெரக் தளத்தில் இருந்து அமெரிக்கா இந்த மினிட்மேன் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.ஏவப்பட்டு 6200கிமீ வரை சென்று மார்சல் தீவுப் பக்கம் ஏவுகணை விழுந்துள்ளது.

இ-6 விமானத்தில் இருந்த படி ஏவுகணையின் செயல்பாடுகளை வீரர்கள் கவனித்துள்ளனர்.சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மறுபுறம் சீனா டிஎப்-26 என்ற நடுத்தூர ரக பலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்துள்ளது.இந்த ஏவுகணையை தான் சீனா “கேரியர் கில்லர்” ஏவுகணை என அழைக்கிறது.