இஸ்ரேல்-அமீரக உறவு: இந்திய வெளியுறவு அமைச்சருக்கு விளக்கிய அமீரக வெளியுறவு அமைச்சர்

  • Tamil Defense
  • August 14, 2020
  • Comments Off on இஸ்ரேல்-அமீரக உறவு: இந்திய வெளியுறவு அமைச்சருக்கு விளக்கிய அமீரக வெளியுறவு அமைச்சர்

ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயேத் அவர்கள் வெள்ளியன்று இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை அழைத்து இஸ்ரேலுடன் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள உறவு குறித்து விளக்கியுள்ளார்.

எகிப்து மற்றும் ஜோர்டானுக்கு பிறகு இஸ்ரேலை அங்கீகரிக்கும் மூன்றாவது முஸ்லிம் அரபு நாடாக அமீரகம் உள்ளது.அமெரிக்கா தலைமையில் இந்த விசயம் சாத்தியமாகியுள்ளது.

இந்தியா இந்த இரு நாடுகளுகளுடனும் நல்ல உறவை பேணி வருகிறது.எனவே இந்த இரு நாடுகளும் இணைவது நல்ல செய்தியே என இந்தியா கூறியுள்ளது.