
தற்போது பாதுகாப்பு படைகளில் உள்ள சீட்டா மற்றும் செடக் உலங்கு வானூர்திகளுக்கு மாற்றாக இந்தியா சொந்தமாக இலகுர யுடிலிடி வானூர்தி ஒன்றை மேம்படுத்தி வருகிறது.
தற்போது இந்த வானூர்தி கடைசி கட்ட சோதனைக்காக லடாக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.ஆகஸ்டு 19 அன்று இரு வானூர்திகள் சோதனைக்காக லடாக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அனைத்து சோதனைகளும் முடியும் பட்சத்தில் கிட்டத்தட்ட 200 வானூர்திகள் ஆர்டர் செய்யப்பட உள்ளன.சியாச்சின் கிளாசியர் மற்றும் தௌலத் பெக் ஓல்டி போன்ற முன்னனி நிலைகளுக்கு லேயில் இருந்து சப்ளைகளை கொண்டு செல்ல இந்த வானூர்திகள் உதவும்.
கிழக்கு லடாக் பகுதியில் இந்திய-சீன எல்லைப் பிரச்சனை தொடர்ந்து வரும் வேளையில் இந்த செயல்பாடு நடந்துள்ளது.