காஷ்மீரில் 200 பயங்கரவாதிகளே மீதமுள்ளனர்-காஷ்மீர் டிஜிபி
1 min read

காஷ்மீரில் 200 பயங்கரவாதிகளே மீதமுள்ளனர்-காஷ்மீர் டிஜிபி

படைகள் தேர்ந்த முயற்சியாலும் பயங்கரவாத எதிர்ப்பு ஆபரேசன்களாலும் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியதாலும் பயங்கரவாத தாக்குதல் அதிக அளவு குறைந்துள்ளது.தற்போது காஷ்மீரில் சுமார் 200 பயங்கரவாதிகளே எஞ்சியுள்ளனர்.கடந்த வருடங்களிலேயே இது மிகவும் குறைவு என்கிறார் காஷ்மீர் டிஎஸ்பி தில்பக் சிங் கூறியுள்ளார்.

ஜீலை 31 வரை மட்டுமே காஷ்மீரில் 150 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.அவர்களில் 120 பேர் உள்ளூர் பயங்கரவாதிகள் ஆவர்.30 பேர் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆவர்.

இந்த வருடம் மட்டுமே பயங்கரவாத இயக்கங்களில் சேரந்த 88 பயங்கரவாதிகளில் 38 பேர் ஏற்கனவே வீழ்த்தப்பட்டுள்ளனர்.மற்றும் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.20 பேர் இன்னும் உயிரோடு உள்ளனர்.அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.