அஸர்பெய்ஜானுக்கு தாக்குதல் ஹெலிகாப்டர்களை அனுப்பியுள்ள துருக்கி, பதற்றம் அதிகரிப்பு !!

துருக்கி தனது டி129 தாக்குதல் ஹெலிகாப்டர்களை அஸர்பெய்ஜான் நாட்டிற்கு அனுப்பியுள்ளதை அஸர்பெய்ஜான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இது குறித்த அறிவிக்கையில் அஸர்பெய்ஜான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இடையிலான பயிற்சிக்கு இவை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும்,

அஸர்பெய்ஜான் நாட்டின் நக்சிவான் பகுதிக்கு துருக்கி விமானப்படையின் சி17 விமானம் மூலமாக துருக்கி வீரர்கள் மற்றும் டி129 ஹெலிகாப்டர்கள் வந்துள்ளன.

அஸர்பெய்ஜான் வந்த துருக்கி படையினரை அந்நாட்டு ராணுவம் தகுந்த மரியாதை அளித்து வரவேற்றுள்ளது.

சமீபத்தில் அஸர்பெய்ஜான் மற்றும் அர்மீனியா இடையே நடைபெற்ற மோதலில் துருக்கி அஸர்பெய்ஜான் நாட்டிற்கு ஆதரவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.