நாயக் நீரஜ்குமார் சிங்

நாய்க் நீரஜ் குமார் சிங் உத்திர பிரதேசத்தின் புலந்ஷகர் மாவட்டத்தின் தேவ்ராலா கிராமத்தை சேர்ந்தவர்.விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்.சாகச விரும்பியான நீரஜ் அவர்கள் பெரிதாக சாதிக்க விரும்பி அதன் காரணமாக இராணுவத்தில் சேர முடிவெடுத்தார்.

இராணுவத்தில் அவர் இராஜபுதன ரைபிள்ஸ் படைப் பிரிவை தேர்ந்தெடுத்தார்.தனது ரெஜிமென்டில் சில காலம் பணியாற்றி விட்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக 57வது ராஷ்டீரிய ரைபிள்ஸ்சில் இணைந்து காஷ்மீர் சென்றார்.இராணுவப் பணியை உயிர் போல நேசித்த அவர் தனது இரு மகன்களான குனால் மற்றும் லவ்பிட்டா இருவரையும் இராணுவத்தில் அதிகாரிகளாக இணைக்க விரும்பினார்.

குப்வாரா : 24 Aug 2014

 
24 ஆகஸ்டு 2014 அன்று நீரஜ் அவர்களின் 57வது Rashtriya Rifles பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக குப்வாரா சென்றது.பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து இராணுவம் தோக் என்ற பகுதியை நெருங்கிய போது பயங்கரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.இந்த சண்டையில் நாய்க் நீரஜ் அவர்களின் படி ( buddy ) வீரரின் மீது குண்டடி பட்டது.நல்ல வேளையாக அது அவரது குண்டுதுளைக்கா உடையில் பட, நாய்க் நீரஜ் அவர்கள் தன் சுயபாதுகாப்பை எண்ணாமல் ஊர்ந்து சென்று தனது சக வீரரை பத்திரமாக மீட்டார்.இதே நேரத்தில் பயங்கரவாதிகள் நாய்க் நீரஜ் அவர்கள் மீது கிரேனேடு வீசி துப்பாக்கியால் கடுமையாக சுட்டனர்.பயங்கரவாதிகள் தாக்குவதை உணர்ந்து வீரமாக முன்னேறி பயங்கராதிகளுக்கு அருகே சென்று ஒரு பயங்கரவாதியை சுட்டு வீழ்த்தினார்.

இந்த நேரத்தில் மற்றொரு பயங்கரவாதி நாய்க் நீரஜ் அவர்கள் மீது சுட அந்த தோட்டா அவரை காயப்படுத்தி அவர் தனது துப்பாக்கியை கீழே போடவைத்தது.ஆனால் நாய்க் நீரஜ் தளராமல் காணக்கிடைக்காத அரிதான விசயமாக அவர் பயங்கரவாதி மீது பாய்ந்து அவன் துப்பாக்கியை பறித்து கையால் தாக்கியே அவனை வீழ்த்தினார்.
இந்த சண்டையில் அவர் கடும் காயமடைந்திருந்தார்.ஆனால் தான் மீட்கப்பட அவர் விரும்பவில்லை.கடைசியாக அவர் தனது சுயநினைவை இழந்தார். அதன் பின் அவரை 92 தள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட அங்கு அவர் வீரமரணம் அடைந்தார்.

நாய்க் நீரஜ் குமார் அவர்களின் இணையற்ற வீரம் , தனித் திறன் தலைமைப் பண்பு , தைரியம் மற்றும் இணையற்ற சண்டையிடும் திறன் காரணமாக அன்று மிக முக்கிய மூன்று ஹிஸ்புல் பயங்கராதிகள் வீழ்த்தப்பட்டனர்.

நாய்க் நீரஜ் குமார் அவர்களுக்கு அமைதிக்கான உயர்ந்த இராணுவ விருதான அசோக சக்ரா வழங்கப்பட்டது.நாய்க் நீரஜ் குமார் அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

வீரவணக்கம்