சௌரிய சக்ரா விருது பெறும் வீரர்களின் வீரவரலாறு

  • Tamil Defense
  • August 14, 2020
  • Comments Off on சௌரிய சக்ரா விருது பெறும் வீரர்களின் வீரவரலாறு

ஹவில்தார் அலோக் குமார் துபே,மேஜர் அனில் அர்ஸ் மற்றும் லெப் கலோ கிரிஷன் சிங் ராவத் ஆகிய வீரர்களுக்கு சௌரிய சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹவில்தார் அலோக் குமார்

ஜீலை 2,1984ம் ஆண்டு உத்திரபிரதேசத்தில் உள்ள பருக்காபாத்தின் பட்புராவில் பிறந்தவர் ஹவில்தார் அலோக் ஆவார்.படிப்பை முடித்து ஜனவரி 20,2002ல் இராணுவத்தில் இணைந்தார்.
பயிறச்சியை வெற்றிகரமாக முடித்த அவர் 23வது இராஜ்புத் படைப் பிரிவில் இணைந்தார்.

2017, ஜனவரி 6 அன்று 44வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் படைக்கு சென்றார்.அங்கு அவரின் வீரதீரம் காரணமாக இந்த விருதை பெறுகிறார்.

மேஜர் அனில் அர்ஸ்

தற்போது எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒரு இன்பான்ட்ரி பட்டாலியனில் கம்பெனி கமாண்டராக உள்ளனார்.ஏற்கனவே சென்னை அதிகாரிகள் பயிற்சி மையத்திலும் 27வது இராஷ்டீரிய ரைபிள்சிலும் பணியாற்றியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 23, 2007ல் இராணுவத்தின் மராத்தா லைட் இன்பான்ட்ரியில் இணைந்து தனது சேவையை தொடங்கியுள்ளார்.

லெப் கலோ கிரிசன் சிங்

உத்ரகண்டில் பிறந்தவர்.பள்ளி படிப்பை முடித்து இராணுவத்தின் பாரசூட் ரெஜிமென்டில் இணைந்துள்ளார்.2010ல் சேனா விருது பெற்றவர் ஆவார்.