
மூன்றாவது ஸ்கார்பின் ரக நீர்மூழ்கியான ஐஎன்எஸ் கரன்ஜ் இன்னும் நான்கு முதல் ஐந்து மாதத்தில் படையில் இணையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.2018ல் கடற்சோதனைகளை தொடங்கிய இந்த நீர்மூழ்கி தற்போது அனைத்து சோதனைகளையும் முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்காவது நீர்மூழ்கியான ஐஎன்எஸ் வேலா அடுத்த வருட இறுதியில் படையில இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது முதல் இரு நீர்மூழ்கிகளான கல்வாரி மற்றும் காந்தேரி படையில் இணைக்கப்பட்டுள்ளது.மொத்தமாக ஆறு நீர்மூழ்கிகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன.