
காஷ்மீரில் செயல்பட்டு வரும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் வழியாக பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்ய பாகிஸ்தான் முயன்றாலும் பெரும்பாலான பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் அவர்கள் கூறியுள்ளார்.
பாகிஸ்தானால் பயங்கரவாதிகள் உருவாக்க முடிந்தாலும் அவர்களால் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் வழங்க முடியவில்லை என டிஜிபி கூறியுள்ளார்.
ஆளில்லா விமானங்கள் வழியாகவும் பயங்கரவாதிகளுக்கு மூன்றுக்கும் அதிகமான ஆயுதங்கள் கொடுத்து எல்லைக்குள் ஊடுருவச் செய்வதின் மூலமும் ஆயுதங்களை இந்தியாவிற்கு கொண்டு வருகிறது பாகிஸ்தான்.
இந்த வருடம் மட்டும் பலமுறை பாக் பயங்கரவாதிகள் ஆயுதம் சப்ளை செய்ய ஊடுருவ முயன்றாலும் நமது வீரர்கள் அவற்றை வெற்றிகரமாக தடுத்துள்ளனர்.