
ஆஃப்கானிஸ்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரில் உள்ள சிறைச்சாலை மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்குதல் நடைபெற்றது.
முதலில் ஒரு கார் வெடிகுண்டு மூலமாக ஒரு பயங்கரவாதி தற்கொலைப்படை தாக்குதலை சிறைச்சாலை வாயில் மீது நிகழ்த்தினான். அதன் பின்னர் பல பயங்கரவாதிகள் சிறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
தங்களது சக உறுப்பினர்களை விடுவிக்கவே ஐ.எஸ் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர், இதில் பல சிறை கைதிகள் தப்பி ஒடினர்.
சிறிது நேரம் கழித்து பாதுகாப்பு படையினர் அங்கு வர சில மணி நேரம் துப்பாக்கி சண்டை நடைபெற்றது அதில் 10 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர், பின்னர் சிறை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சில கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
இந்த தாக்குதலில் 29 பேர் இறந்துள்ளனர், 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என ஆஃப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.