48 மணி நேரத்தில் 10 பயங்கரவாதிகளை அதிரடியாக வீழ்த்திய வீரர்கள்

தற்போது ஸ்ரீநகரின் பந்தசோக் பகுதியில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.இந்த சண்டையில் காஷ்மீர் காவல்துறை வீரர் ஒருவரும் வீரமரணம் அடைந்துள்ளார்.இது கடந்த 48 மணி நேரத்தில் மூன்றாவது என்கௌன்டர் ஆகும்.

நேற்று புல்வாமாவில் நடைபெற்ற என்கௌன்டரில் இந்திய பாதுகாப்பு படைகள் மூன்று பயங்கரவாதிகளை அதிரடியாக வீழ்த்தினர்.இது கடந்த 48 மணி நேரத்தில் இரண்டாவது என்கௌன்டர் ஆகும்.

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஜதுரா கிராமத்தில் இரண்டாவது என்கௌன்டர் நடைபெற்றது.

இதற்கு முன் வெள்ளியன்று நடைபெற்ற என்கௌன்டரில் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.ஒரு பயங்கரவாதி சரணடைந்தான்.

அல் பத்ர் மாவட்ட கமாண்டர் ஷகூர் பரே என்ற முக்கிய பயங்கரவாதி இந்த என்கௌன்டரில் வீழ்த்தப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.