பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து விவாதித்த பிரதமர் மோடி மற்றும் ஆஃப்கன் அதிபர் கானி !!

  • Tamil Defense
  • August 4, 2020
  • Comments Off on பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து விவாதித்த பிரதமர் மோடி மற்றும் ஆஃப்கன் அதிபர் கானி !!

ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தொலைபேசி வாயிலாக பாதுகாப்பு நிலவரங்கள், பயங்கரவாத பிரச்சினைகள் ஆகியவற்றை குறித்து விவாதித்தனர்.

ஈத் பெருநாளை முன்னிட்டு இரு தலைவர்களும் வாழ்த்து செய்திகளை பரிமாறி கொண்டனர், அதன் பிறகு இப்பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

பின்னர் ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி கொரோனா எதிர்ப்புக்கு இந்திய அளித்த மருத்துவ உதவிகள், உணவு பொருட்கள் ஆகியவற்றிற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் ஆஃப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லாஹ் மொஹீப் மற்றும் இந்திய தூதர் வினய் குமார் ஆகியோர் காபூல் நகரில் சந்தித்து பேசினர் என்பது கூடுதல் தகவல்.