இந்திய கடற்படைக்காக சூப்பர் ஹார்னெட் விமானத்தை சோதனை செய்யும் போயிங் நிறுவனம்
1 min read

இந்திய கடற்படைக்காக சூப்பர் ஹார்னெட் விமானத்தை சோதனை செய்யும் போயிங் நிறுவனம்

அமெரிக்காவின் மேரிலேன்டில் கடற்படை வான்பிரிவு தளத்தில் உள்ள தரையை அடிப்படையாக கொண்ட ஸ்கை ஜம்ப் அமைப்பில் இருந்து போயிங் நிறுவனம் F/A-18E/F Super Hornet விமானத்தை சோதனை செய்துள்ளது.விக்ரமாதித்யா மற்றும் விக்ராந்த் போன்ற short take-off but arrested recovery configured (STOBAR) அமைப்பு கொண்ட விமானம் தாங்கி கப்பலில் இருந்து ஹார்னெட் விமானங்களை இயக்கலாம் என்பதை இந்திய கடற்படைக்கு காட்ட போயிங் நிறுவனம் இந்த சோதனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கப்பல்களில் இருந்து வண்ணம் சரியானதாக இருக்குமா என்பதை அறிய 150 முறை பறத்தல் குறித்து சோதனை ( Flight simulation) செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.சூப்பர் ஹார்னெட் பிளாக் 3 இந்திய கப்பல்களில் இருந்து இயக்க ஏற்றதாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போதுள்ள கப்பலிலும் சரி இந்தியா கட்டி வரும் கப்பலில் இருந்து சரி ஹார்னெட் விமானங்களை இயக்கலாம்.அதற்கு ஏற்றதாக விமானம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்திய கடற்படைக்காக 57 புதிய விமானங்கள் வாங்கப்பட உள்ளன.மிக்-29 சிறப்பாக செயல்படுவதில்லை என்ற ஒரு தகவலும் உள்ளது.எனவே இந்திய கடற்படை மாற்று வழிகளை யோசித்து வருகிறது.

தற்போது போட்டியில் மிக்-29,ரபேல்,கிரிப்பன் மற்றும் ஹார்னட் விமானங்கள் உள்ளன.தேஜசின் கடற்படை வகையும் தயாராகி வருகிறது.ஆனால் இந்திய கடற்படை இதை நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.