மிரட்டி பார்த்த பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா வைத்த ஆப்பு !!

  • Tamil Defense
  • August 10, 2020
  • Comments Off on மிரட்டி பார்த்த பாகிஸ்தானுக்கு சவுதி அரேபியா வைத்த ஆப்பு !!

சமீபத்தில் பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு ஆலோசனை நடத்த வேண்டும் இல்லையெனில் பிரிந்து செல்வதாகவும்,

காஷ்மீர் விவகாரத்தில் தன்னுடன் ஒத்த கருத்துடைய வேறு நாடுகளை ஒருங்கிணைத்து புதிய கூட்டமைப்பை தொடங்குவோம் என மிரட்டல் விடுத்தது.

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு பல முறை பாகிஸ்தானின் மேற்குறிப்பிட்ட கோரிக்கையை பல முறை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு பொருளாதார உதவி அடிப்படையில் 3.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எரிபொருளை வழங்கவிருந்த நிலையில்,

தற்போது சவுதி அரேபியா அதனை நிறுத்தி வைத்துள்ளது, இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.