காஷ்மீரில் என்கௌன்டர்; இராணுவ வீரர் வீரமரணம்

  • Tamil Defense
  • August 12, 2020
  • Comments Off on காஷ்மீரில் என்கௌன்டர்; இராணுவ வீரர் வீரமரணம்

புல்வாமாவின் கம்ரசிரோபா பகுதியில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் இராணுவ வீரர் உட்சபட்ச உயிர் தியாகம் செய்துள்ளார்.

சண்டையின் போது வீரர் படுகாயமடைந்துள்ளார்.அவரை உடனடியாக மீட்ட வீரர்கள் 92வது தள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவர் வீரமரணம் அடைந்தார்.

தற்போது 53வது இராஷ்டீரிய ரைபிள்ஸ்,சிஆர்பிஎப் மற்றும் காவல்துறை இணைந்த பாதுகாப்பு குழு என்கௌன்டரை தொடர்ந்து நடத்தி வருகிறது.