
சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ஆண்டு தோறும் ரக்சாபந்தன் எனும் திருவிழா வடமாநிலங்களில் கொண்டாடப்படுகின்றது.இதை முன்னிட்டு நடந்த விழாவில் காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் பணிபுரியும் வீரர்களுக்கு வடகிழக்கு மாநில சகோதரிகள் கயிறு அணிவித்தார்.
யூனியன் அமைச்சர் ஜிதேந்திர சிங் இந்த விழாவை தொடங்கி வைத்தார்.அருணாச்சல்,மணிப்பூர்,மேகலயா,அஸ்ஸாம்,மிசோரம்,சிக்கிம் ,நாகலாந்து,திரிபுரா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பெண்கள் ராக்கி,முக கவசம் ஆகியவற்றை வீரர்களுக்கு அனுப்பி வைத்தனர்.