சிறப்பு: ராணுவம் தொடர்பான திரைப்படங்கள் ,தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க பாதுகாப்பு துறையிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் !!

  • Tamil Defense
  • August 1, 2020
  • Comments Off on சிறப்பு: ராணுவம் தொடர்பான திரைப்படங்கள் ,தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க பாதுகாப்பு துறையிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் !!

ராணுவம் தொடர்பான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்க முன்கூட்டியே பாதுகாப்பு துறை அமைச்சகத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் முப்படையினரை காட்சி படுத்துகையில் சீருடைகள் மற்றும் வீரர்கள் பற்றி தவறான பிம்பம் காண்பிக்கப்படுகிறது.

அதாவது சீருடைகளில் படக்குழுவினர் சரியாக கவனம் செலுத்துவதில்லை, உதாரணமாக நடிகர் விஷால் ராணுவ அதிகாரியாக நடித்த இரும்புத்திரை படத்தில் அவர் மெட்ராஸ் ரெஜிமென்ட் அதிகாரியாக நடித்திருப்பார் ஆனால் சீருடை தொப்பியில் முப்படைகள் சின்னம் இருக்கும்.

இது போன்ற தவறுகள் உட்பட அதிகாரிகள் வீரர்கள் பயன்பாட்டிலேயே இல்லாத சீருடைகள் அணிவது, பதவிக்கும் படத்தில் தோள்பட்டையில் இருக்கும் பதவிக்கும் தொடர்பே இருக்காது போன்ற பல தவறுகள் இருக்கும்.

இதனை நாங்களும் உணர்ந்துள்ளோம் இதனை கண்டு வேதனை அடைந்தும் உள்ளோம் ஏனெனில் சீருடை என்பது எங்களை பொறுத்தவரையில் புனிதமானது அதில் தவறுகள் இருத்தல் கூடாது.

இதன் அடிப்படையில் பாதுகாப்பு துறைக்கு பலர் புகார் அளித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,

இதன்படி மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க உள்ளன.

படக்குழுவினர் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு ரெஜிமென்ட் பதவி போன்ற தேவையான தகவல்களை பெற்று கொண்டு காட்சி படுத்துதல் மிகவும் இன்றியமையாதது ஆகும்.

அந்த வகையில் தமிழில் நடிகர் சூர்யா மற்றும் காரத்தி ஆகியோர்ப நடித்த வாரணம் ஆயிரம், காற்று வெளியிடை ஆகிய படங்களில் மிக சரியாக வடிவமைப்பு இருக்கும்.

அதிலும் நடிகர் சூர்யா வாரணம் ஆயிரம் படத்தில் உடை நடை பாவனை என ராணுவ அதிகாரியாகவே வாழ்ந்திருப்பார், அதிலும் டேராடூன் இந்திய ராணுவ அகாடமி காட்சிகள் மிக சிறப்பு.

இத்தகைய தவறுகள் நடைபெறாமல் பார்த்து கொள்ள வேண்டியது திரைப்பட துறையினரின் கடமை ஆகும்.