1 min read
24 மணி நேரத்தில் ஏழு பயங்கரவாதிகளை அதிரடியாக வீழ்த்திய வீரர்கள்
புல்வாமாவில் நடைபெற்று வரும் என்கௌன்டரில் இந்திய பாதுகாப்பு படைகள் மூன்று பயங்கரவாதிகளை அதிரடியாக வீழ்த்தினர்.இது கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாவது என்கௌன்டர் ஆகும்.
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஜதுரா கிராமத்தில் இந்த என்கௌன்டர் நடைபெற்றது.
இதற்கு முன் வெள்ளியன்று நடைபெற்ற என்கௌன்டரில் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.ஒரு பயங்கரவாதி சரணடைந்தான்.
அல் பத்ர் மாவட்ட கமாண்டர் ஷகூர் பரே என்ற முக்கிய பயங்கரவாதி இந்த என்கௌன்டரில் வீழ்த்தப்பட்டான்.