
இரண்டாம் தொகுதி ரபேல் போர்விமானங்கள் வரும் அக்டோபர் மாதம் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நான்கு விமானங்கள் இந்தியா வர உள்ளது.
முதல் ஐந்து ரபேல் விமானங்கள் விமானப்படையில் வரும் செப்டம்பர் 10 அன்று அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளது.இந்த விழாவில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.தவிர பிரான்ஸ் நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சரும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முதல் ஐந்து விமானங்கள் கடந்த ஜீலை 29 அன்று அம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கின.இதில் இரு இரட்டை இருக்கைகள் கொண்ட விமானங்களும் அடக்கம் ஆகும்.