
சோபியானில் இராணுவ வீரர் காணாமல் போய் ஒரு வாரம் ஆன பிறகும் இன்னும் அவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.ரைபிள்மேன் ஜகீர் மன்சூர் குடும்பத்துடன் ஈத் கொண்டாடட்டத்திற்காக காஷ்மீர் சென்றுள்ளார்.ஆகஸ்டு 2 மாலை முதல் அவரை இன்னும் காணவில்லை.
162வது பட்டாலியனை சேர்ந்த அவர்கள் காஷ்மீரின் சோபியானுக்கு விடுமுறையில் சென்றுள்ளார்.அவரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அவரது எரிக்கப்பட்ட கார் குல்கம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிராந்திய இராணுவத்தை சேர்ந்த அவரை பயங்கரவாதிகள் கடத்தியிருக்க கூடும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.