அக்டோபரில் இந்தியா வரும் இரஷ்ய அதிபர் புதின்
1 min read

அக்டோபரில் இந்தியா வரும் இரஷ்ய அதிபர் புதின்

வருடாந்திர இரு நாட்டு மாநாட்டில் கலந்து கொள்ள இரஷ்ய அதிபர் இந்தியா வர உள்ளார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது இரு நாட்டு உயர் அதிகாரிகளும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச உள்ளதாக வெளியுறவு செய்தி தொடர்பாளர் அனுராக் அவர்கள் கூறியுள்ளார்.

இது தவிர ஒரு முக்கியமான விசயம் எல்லையில் இந்தியா சீனா மோதல் ஈடுபட்டு வரும் நிலையில் இரஷ்ய அதிபரின் இந்த வருகை நிகழ உள்ளது.

படை விலக்கம் குறித்து இந்தியா உறுதியுடன் உள்ளது.சீனாவும் இந்தியாவிற்கு பிரச்சனையை தீர்க்க ஒத்துழைப்பு தர வேண்டும் இந்தியா எதிர்பார்க்கிறது.