
இந்தியா இரஷ்யா கூட்டு முயற்சியில் உருவானது தான் பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை ஆகும்.பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தற்போது பிரம்மோஸ் ஏவுகணையை மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இரஷ்யா மற்றும் இந்தியாவிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை பெற ஆர்வம் காட்டியுள்ளன.இரஷ்யா மற்றும் இந்தியா அனுமதி வழங்கியுள்ளதால் இந்த பான்டமிக்கிற்கு பிறகு ஏற்றுமதியில் கவனம் செலுத்த உள்ளதாக பிரம்மோஸ் சீப் ஜெனரல் மேனேஜர் பிரவீன் பதக் அவர்கள் கூறியுள்ளார்.