இந்தியாவின் ரபேல் விமானங்கள் பார்த்து பயமில்லை,எதற்கும் தயார்-பாகிஸ்தான்
1 min read

இந்தியாவின் ரபேல் விமானங்கள் பார்த்து பயமில்லை,எதற்கும் தயார்-பாகிஸ்தான்

இந்தியாவினுடைய எந்த தாக்குதலுக்கும் பாக் இராணுவம் தயாராக உள்ளதாகவும் இந்தியாவினுடைய ரபேல் விமானங்களை பார்த்து பயமில்லை என பாக் இராணுவ செய்தி பிரிவு கூறியுள்ளது.

பாக் ஐஎஸ்பிஆர் டிரேக்டர் ஜெனரல் பாபர் இப்திகார் பேசுகையில் இந்தியா சமீபத்தில் பெற்ற ரபேல் விமானங்களால் பாக் பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என கூறியுள்ளார்.

ஐந்து வாங்கினாலும் சரி 500 வாங்கினாலும் சரி நாங்கள் எதற்கும் தயாராகவே உள்ளோம் என அவர் பேசியுள்ளார்.