வருடத்திற்கு 5000 பினாகா ராக்கெட்டுகள்; இராணுவத் தேவையை பூர்த்தி செய்ய முடிவு
1 min read

வருடத்திற்கு 5000 பினாகா ராக்கெட்டுகள்; இராணுவத் தேவையை பூர்த்தி செய்ய முடிவு

அம்பஜ்ஹரியில் உள்ள இந்திய ஆர்டினன்ஸ் பேக்டரி தற்போது பினாகா ராக்கெட்டுகளை தயாரித்து இராணுவத்திற்கு வழங்கி வருகிறது.தற்போது வருடத்திற்கு 1000 என்ற அளவில் ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது.தற்போது அதை 5000 ஆக உயர்த்தி தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பினாகா ராக்கெட் தயாரிப்பது தான் இந்த ஆர்டினன்ஸ் பேக்டரியின் முக்கிய பணியாகும்.டிஆர்டிஓ உடன் இணைந்து தற்போது இந்த ராக்கெட்டுகள் முழுவதும் சொந்தமாகவே தயாரிக்கப்படுகின்றது.

-10 டிகிரி முதல் 55 டிகிரி வெப்பநிலை உள்ள இடங்களில் கூட இந்த ராக்கெட்டை ஏவ முடியும்.100கிகி எடையுடைய வெடிபொருளுடன் 40, 75 & 90 கிமீ வரை உள்ள இலக்குகளை துவம்சம் செய்யக்கூடியது.

ஆறு லாஞ்சர்களுடன் கூடிய ஒரு பேட்டரி 1,000 m × 800 m அளவுள்ள இடத்தை துவம்சம் செய்ய கூடியது.இந்த ராக்கெட் தற்போது இந்திய இராணுவத்தில் செயல்பாட்டில் உள்ளது.