தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட் வெற்றிகரமாக சோதனை
1 min read

தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட் வெற்றிகரமாக சோதனை

இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் பட்சத்தில் முழுதும் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ராக்கெட் இந்திய இராணுவத்தால் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

பினாகா ராக்கெட் தொழில்நுட்ப பரிமாற்றம் பெற்று தனியார் நிறுவனம் இந்த ராக்கெட்டுகளை தயாரித்துள்ளது.இனி இராணுவம் தேவைக்காக ஆர்டினன்ஸ் தொழிற்சாலையை மட்டுமே நம்பியிருக்க தேவையில்லை.

கடைசி சோதனையாக ஆறு பினாகா ராக்கெட்டுகள் சோதனை செய்யப்பட்டன.இந்த ராக்கெட்டுகள் Economic Explosives Ltd (EEL) ஆல் தயாரிக்கப்பட்டுள்ளது.இராணுவத்திற்கு இந்த ரக ராக்கெட்டுகள் அதிக அளவில் தேவையாக உள்ளது.பினாகா இந்தியா சொந்தமாக மேம்படுத்திய பலகுழல் ராக்கெட் ஏவு அமைப்பு ஆகும்.தற்போது இது இந்திய இராணுவத்தில் சர்விசில் உள்ளது.